“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Saturday, June 20, 2015

மனித குல வரலாறு - ஏ.எஸ்.கே

மனிதகுல வரலாறு
ஏ.எஸ்.கே
பக்கங்கள்: 136
விலை ரூ.70
விஞ்ஞான வளர்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன. கனவிலும் கண்டிராதவற்றை மனிதன் இன்று கண்டுபிடித்துள்ளான். உண்மையில் கண்கண்ட தெய்வமாக மனிதன் காட்சி அளிக்கிறான். ஆனால், உலகில் பெரும்பகுதி மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் வழிபாடு, மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தொழிலாளி வர்க்கம், பிற்போக்கு அமைப்பிற்கு இருப்பிடமாயுள்ள ஜாதி, சமயம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அறவே ஒழிக்க வேண்டும்.
விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தைக் காண்பதுதான் உண்மை என்பதனை ஓரளவு விளக்க, இயற்கையும் சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்கின்றன; இக்கோட்பாடுகள் எவை இவற்றைப் புரிந்துகொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல இந்நூல் எழுதப்பட்டுள்ளது.