“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Sunday, January 22, 2012

டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”


டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால்
வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது.
வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற
வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த
ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை
பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

விலை: ரூ.18 பக்கங்கள்: 48

திபெத்திய மரண நூல் - பத்மசம்பவர்


திபெத்திய மரண நூல்
பத்மசம்பவர்
தமிழாக்கம்: ஓ.ரா.ந. கிருஷ்ணன்

திபெத்திய மரண நூல் (Tibetan Book Of The Dead) என்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள இந்த நூல் மரணத்திலும், மரணத்திற்குப் பின்பும் மறுபிறவி கொள்வதற்கு முன்பும் உள்ள இடைநிலையிலும், மறுபிறவி கொள்ளும் நிலையிலும் நிகழ்பவற்றை தியானத்தில் பெற்ற ஞானக் காட்சிகளின் மூலம் தெளிவாகக் கண்டுணர்ந்து விரிவாக விளக்கிக்கூறும் ஒப்பற்ற பௌத்த சமய நூலாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து திபெத்திற்குப் பௌத்த சமயப் போதகராகச் சென்று அங்கு பௌத்த தம்மத்தை வேரூன்றி வளரச் செய்த பத்மசம்பவர் எனும் ஞானயோகியால் இயற்றப்பட்டதாகும் இந்த அரிய நூல்.
நல்ல வாழ்க்கை இல்லையெனில் நல்ல மரணம் இல்லை. நல்ல மரணம் விமோச்சனத்திற்கு அல்லது நல்ல மறுமைக்குக் காரணமாகின்றது. எவ்வாறு நல்ல வாழ்க்கை வாழ்வது, நல்ல மரணம் எய்துவது, நல்ல மறுமை பெறுவது என்று விளக்கிக் கூறும் இந்த நூல் உலக இலக்கியங்களில் தலைசிறந்த ஒரு நூலாகப் போற்றிப் பாராட்டப்படுகின்றது. இந்த அரிய நூல் இப்போது முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ்த்தாயின் பொன்னடிகளில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

வெளியீடு: மெத்தா
விலை ரூ. 280

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?


காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?
அ.மார்க்ஸ்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு


‘எல்லைதாண்டிய பயங்கரவாதம்’தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர்.
இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர்ப் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.
‘காஷ்மீர்ப் பிரச்சினை’ என்பது உண்மையில் ‘காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை’ என்பதன் சுருக்கமே.
காஷ்மீர்ப் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, இன்றைய நிலையை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச்
செல்கிறார் அ. மார்க்ஸ்.
2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றைச் சொல்லும் நூலாசிரியர், புதிய சூழல்களில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல உங்கள்முன் வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல, தென் ஆசியாவில் நடைபெற்றுவரும் இதர விடுதலைப்
போராட்டங்களுக்கும் பொருத்தமானவையே.

விலை ரூ. 130

அ. மார்க்ஸ் சில மதிப்பீடுகள்


அ. மார்க்ஸ் சில மதிப்பீடுகள்
தொகுப்பு: மீனா

எழுத்தாளர் பேச்சாளர் களச்செயற்பாட்டாளர் என பன்முகப் பரிமாணங்களோடு இயங்கிவருகிற
பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலுக்குச் செய்திருக்கும் பங்களிப்புகள் அளப்பரியது. மரபுவழிப்பட்ட கலாச்சார பொதுப்புத்திகளுக்குப் பேரதிர்ச்சியையும், நவீன சிந்தனைகளுக்கு மனந்திறப்போரிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய அவரது முப்பதாண்டு கால செயற்பாடுகளின் மீது தமிழின் முக்கிய எழுத்தாளர்களும், கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தமது மதிப்பீடுகளை முன்வைத்துள்ளனர்.
நட்புரீதியான அனுமானங்கள், எழுத்துகளின் மீதான வாசிப்புகள், உடனியங்கிய அனுபவங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் வெளிப்பட்டுள்ள இம்மதிப்பீடுகள்
வெற்றுப் புகழுரைகளாகவோ, அவதூறுகளாகவோ அன்றி அ.மா-வை விமர்சனப் பூர்வமாய் அணுகியுள்ளன. அதிகாரங்களையும், அவமதிப்புப் பிரச்சாரங்களையும், தனிமைப்பட நேர்ந்த சூழல்களையும் எதிர்கொண்டு அ. மார்க்ஸ் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்புகளை நமக்கு பறைசாற்றுகின்ற இத்தொகுப்பு, தமிழின் ஆகப்பெரும் சிந்தனையாளர் வரிசையில் அ. மார்க்ஸ் தவிர்க்க இயலாதவர் என்பதற்கும் சான்று பகர்கின்றது.

விலை ரூ.220

ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து


ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து
அ. மார்க்ஸ்

வெளியீடு: இந்திய சமூகச் செயல்பாட்டுப் பேரவை

விழிப்படல், கைரேகைகள் முதலிய அங்க அடையாளப்
பதிவுகளுடன் கூடிய
"ஆதார அடையாள அட்டை” (unique identity card)
ஒன்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு
நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
சமூக நலத் திட்டங்கள் இத்தகைய ஆதார அட்டையின் அடிப்படையிலேயே
செயல்படுத்தப்படும் என
ஆளுநர் உரையில் அறிவுறுத்தியிருக்கிறது ஜெயலலிதா அரசு.
இது மக்களின் அனைத்து அந்தரங்கங்களையும்
அரசு தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வரும்
முயற்சிமட்டுமல்ல, படிப்படியாகச் சமூக நலத்திட்டங்களின்
பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவே வழிவகுக்கும்
என்பதை விளக்குகிறது இக் குறுநூல்

விற்பனை உரிமை: புலம்

விலை ரூ.10

இழப்பதற்கு ஏதுமில்லை


இழப்பதற்கு ஏதுமில்லை
அ. மார்க்ஸ்

“ஒவ்வொருமுறை அ. மார்க்ஸின்
பேனா குனியும்போதும் ஒரு தலித் அல்லது முஸ்லிமின் தலை நிமிர்கிறது”
சுமார் இருபதாண்டு காலமாக அவர்
எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் தொடர்பான தேர்வு செய்யப்பட்ட
பதிமூன்று கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குலகும் பாசிச சக்திகளும் முன்வைப்பதுபோல முஸ்லிம்களைக் கலாச்சாரத்தின் கைதிகளாகப் பார்க்க இயலாது, மாறாகக் கலாச்சாரச் சொல்லாடல்களையே சமகால அரசியலில் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும் என முன்னுரையில்
சொல்வதற்கிணங்க முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடல்கள் இக்கட்டுரைகளில் கட்டுடைக்கப்படுகின்றன.
சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான ஒரு அடக்கமான கையேடாக இன்று இது உங்கள் கைகளில் தவழ்கிறது

விற்பனை உரிமை: புலம்

விலை ரூ. 135

பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு (சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)


பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி
அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு

(சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)

அ. மார்க்ஸ்-கோ.சுகுமாரன்

பாபர் மசூதி x இராமர் ஜென்ம பூமிப் பிரச்சனையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீர்ப்புக்குப் பின் அயோத்தி மக்களின் மன நிலையும், வழக்குத் தொடுத்தவர்கள் நிலைபாடுகளையும் நேரில் கண்டறிய அ. மார்க்சும் கோ. சுகுமாரனும் அயோத்திக்கு நேரில் சென்றனர்.
இந்துக்கள், முஸ்லிம்கள், பொது நிலையினர், அரசியல் கட்சியினர் பத்திரிகையாளர்கள் வழக்காடிகள் எனப் பலரையும் அவர்கள் சந்தித்த அனுபவம் ஒரு நாவலின் விறுவிறுப்புடன் இங்கே....

விலை ரூ.55

சேகுவேராவின் கடிதங்கள்


சேகுவேராவின் கடிதங்கள்

தமிழாக்கம்: உமர்


எனக்கும்
உங்களுக்கும்
இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று
நான் நினைக்கவில்லை.
உலகில் நடக்கிற
அநீதியைக் கண்டு
நீங்கள் கோபம்
கொள்வீர்கள் என்றால்
நாம் தோழர்கள் தான்.
அது தான் முக்கியம்.

எனது குழந்தைகளுக்கு,
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல்
வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும்
என்பது தான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும் இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பது தான்.
ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம்.
என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.
உங்கள் தந்தை
சே

விலை ரூ. 40

ஜஸ்டின் (நாவல்) மார்க்விஸ் தே சாட்


ஜஸ்டின் (நாவல்)

மார்க்விஸ் தே சாட்


தமிழாக்கம்: உமர்


எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்கிற ஒரு துயரம் நிறைந்த கதைதான் இது.
நாம் எதிர்கொள்ள வேண்டி வருகிற கஷ்டங்களை நினைத்து நீங்கள் கண்ணீர் வடித்தால்
நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்லவளான பாவம் ஜஸ்டினின் பயங்கரமான துயரக் கதையை
வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்ட நாங்கள் கட்டாயம் ஆனவர்களானோம்.
அவள் எங்களிடம் சகிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். படிக்கும்போது மேடம் லோர்கினைப் போல உங்களுக்கும் அதன் பயன் கிடைக்கும். அவரைப் போலவே உங்களுக்கும் ஒரு விஷயம் புரியும். யதார்த்த மகிழ்வின் இடம் நன்மையே ஆகும். பூமியில் நன்மை தண்டிக்கப் பட்டால் கடவுள் அனுமதித்தால் கூட அவனது லட்சியத்தை நாம் கேள்வி கேட்கக் கூடாது. நன்மைக்கான பிரதிபலன் ஒருவேளை அடுத்த ஜென்மத்திலாக இருக்கலாம். புனித பைபிளில் சொல்வதைக் கேளுங்கள்.

“தர்மத்தை கடைப்பிடிப்பவனை மட்டுமே கர்த்தர் பரிசுத்த ஆத்மாவாக அறிவிக்கிறார்.”
சரிதான். நன்மையின் பிரதிபலன் நன்மை என்று நினையுங்கள்.

விலை ரூ.80

தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்


தமிழகப் பழங்குடி வழக்காற்றியல்
கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்


பேரா. நல்லதம்பி

பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகள் பலவற்றையும் கொண்டுள்ள இந்நூல், கல்வராயன் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறுஉற்பத்திச் செயல்பாட்டுக்குரிய சடங்குமுறை, கூத்து முதலான கலைவடிவங்களின் இயல்பையும் அவற்றின் தனித்துவத்தையும் நம்பகத் தன்மையோடு பதிவு செய்துள்ளது.
மொழியியல், மானுடவியல், பண்பாட்டு வழக்காற்றியல் நோக்கில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு நூல்கள் குறைவாகவே வந்துள்ள தமிழ்ச் சூழலில், இந்நூல் கல்வராயன் மலைவாழ் பழங்குடிகள் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக்குவதற்கும், அவர்கள் குறித்த மேலாய்வு செய்வதற்கும் துணை நிற்கும்.

விலை ரூ.140

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் கிளாராவின் நினைவில்


குருதியில் மலர்ந்த
மகளிர் தினம்
கிளாராவின் நினைவில்


கிளாரா...
உனது பெயர் விடுதலைக்குப் போராடுகின்ற பெண்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தரும். உனது பெயர் திரிபுவாதிகளின் நெஞ்சை வெடித்துச் சிதறச் செய்யும். சுரண்டப்பட்ட மக்களின் விடுதலையில்தான் பெண் விடுதலை அடங்கியிருக்கிறது என்று சொன்னாய்!
சக தோழர்களிடமுள்ள தந்தைவழி சிந்தனையை எப்படிப் போக்க வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டினாய்...
கிளாரா...
எங்களின் வழிகாட்டியே!
‘‘பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஆண் தொழிலாளர்மீது வைத்த அக்கறையை பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால் அது பாட்டாளி வர்க்க இயக்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்.’’
இந்த உனது வார்த்தைகள் எங்களது காதுகளில் ரீங்காரமிடும் போதெல்லாம் உனது உன்னதமான புரட்சிகர வாழ்வின்
வெளிச்சத்தையே எங்கள் இலட்சியத்தின் திசையாகக் கொண்டு அப்பாதையில் உறுதியாகத் தெளிவாகப் பயணிப்போம்.
உனது இலட்சியக் கனவுகளை நிறைவேற்றுவோம்.

விலை ரூ.60

ஆஷ் படுகொலை மீளும் தலித் விசாரணை அன்புசெல்வம்


ஆஷ் படுகொலை

மீளும் தலித் விசாரணை

அன்புசெல்வம்


சாதிகளின் தோற்றம்
வளர்ச்சி, தக்க வைக்கும்
பிழைப்புவாத இயங்கியல்
இவற்றை கோட்பாட்டு ரீதியாக,
கல்வி - அறிவுத் தளத்தில் நன்றாக
அறிந்து வைத்திருக்கின்ற, சமுக மாற்றம் பேசும் படித்த அறிவு ஜீவிகளின் சாதி உணர்வு இருக்கிறதே. அதையும் கண்டறிந்து, அவர்களிடம் பேசும் சாதி ஒழிப்பு அரசியல் சமுக மாற்றத்துக்கான காரணியாக அமைவதில்லை. அது அவர்களின்
உள் மனதில் நுட்பமாகப் பதுங்கிக் கிடப்பதை
ஆஷ் படுகொலை வரலாற்றில் கண்டுணர முடிந்தது. இப்படுகொலையில் நேரடியாக, மறைமுகமாக,
சராசரி பார்ப்பனர்களும், எடைக்கு எடை வேளாளர்களும் செய்த இத்தகைய
அறிவு ஜீவித்தன அசிங்கத்தை
எங்கே போய் சொல்ல!

விலை ரூ.60

எதிர்ச் சொல் பாரதி தம்பி


எதிர்ச் சொல்
பாரதி தம்பி
பத்து வருடங்கள் சமூகத்தை தொடர்ந்து கவனித்து வரும்
ஒரு பத்திரிகையாளரின் கவனிக்கத்தகுந்த கட்டுரைகள் இவை. யாவும் வணிகமாகிவிட்ட
நடப்பு உலகமய உலகில், பரபரப்புக்காக அல்லாமல்
மக்களின்பால் கரிசனம் கோரும் இவ்வெழுத்துக்கள்தான் உடனடி தேவையும் கூட. பொதுப்புத்திக்கு எதிரே நின்று தர்க்கம் புரிவதை ஒட்டுமொத்த கட்டுரைகளின் சாரமாகக் கொள்ளலாம்.
ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன ஊடகங்களில் இயங்கிவரும் பாரதி தம்பியின் இந்தக் கட்டுரைகள் வெகுஜன இதழ்களுக்கே உரிய மேம்போக்குத் தன்மையில் இருந்து விலகியிருப்பதும், உண்மையை உள்ளடக்கமாய் கொண்டிருப்பதும் முக்கியமானது!

விலை ரூ.70

தேசிய இனப் பிரச்சினை: மார்க்சியம் சொல்வதென்ன? வி.ஐ. லெனின் ஜே.வி. ஸ்டாலின்


தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத,
அதற்காகப் போராடாத எவரும்,
எல்லாவிதமான சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதிகள் அல்லர்; ஜனநயாகவாதியுங்கூட அல்லர்;
அது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

விலை ரூ.10