“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, September 15, 2020

புலம் புதிய வெளியீடு






 பொன்னியின் செல்வன் - கல்கி

2100 பக்கங்கள்

விலை ரூ.600

புலம் புதிய வெளியீடு


 

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே? - அ.மார்க்ஸ்

விலை ரூ.240

எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சிக்கல் எனச் சொல்வது வழக்கம். இதன் பின்னணியாக இருப்பது காஷ்மீர் பிரச்சினை. முடியரசுகளுக்கு உட்பட்ட பிற பகுதிகள் இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்டதற்கும் காஷ்மீர் இணைக்கப்பட்டதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. காஷ்மீர் மக்கள் மத்தியில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதா இல்லை இந்தியாவுடன் இணைவதா என்பது  தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. அதுவரை காஷ்மீருக்கென சில சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்பது மற்றது. எனினும் அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படாததோடு,  இந்தச் சிறப்புரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்ட நிலையில் அம் மக்கள் போராடத் தொடங்கினர். 1954 முதல் 1989 வரை அமைதி வழியில் நடந்த அம் மக்கள் போராட்டம் அதன் பின் ஆயுதப் போராட்டமாக மாறியது.  எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்பாடுகளும் தொடங்கின. அதன் பின் எவ்வளவோ நடந்துவிட்டன.

இன்று காஷ்மீர் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிறப்புரிமை நமது அரசியல் சட்டத்திலிருந்து முழுமையாகவே நீக்கப்பட்டுவிட்டது இந்தப் பின்னணியில் இந்நூலின் விரிவாக்கப்பட்ட இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது.

இதன் முதல் பதிப்பு 2008ல் வெளிவந்தது. காஷ்மீருக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஒரு குழுவில் இருந்த .மார்க்ஸ் தனது நேரடி கள ஆய்வு மற்றும் நூலாய்வுகளின் அடிப்படையில் எழுதிய இந்நூல் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஒன்று. ஒரு ஆய்வு நூலாக மட்டுமல்லாமல் நேரடிக் கள ஆய்வு மற்றும் பலரது நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டதால் ஒரு இலக்கியமாக வெளிப்போந்த நூல் இது.

இந்த மூன்றாம் பதிப்பு மேலும் மேலும் நான்கு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கி புல்வாமா தாக்குதல் வரை காஷ்மீர் பிரச்சினையைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கிறது. காஷ்மீர் பண்டிர்களின் வெளியேற்றம் பற்றி நடுநிலையுடன் எழுதப்பட்ட ஒரு ஆழமான கட்டுரையும் இந்தப் பதிப்பில் உண்டு.

புலம் புதிய வெளியீடு


 மூன்று காதல் கதைகள் - இவான் துர்கேனிவ்

விலை ரூ.350

துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்துவருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறுநாவல்களிலிருந்தே அடிக்கடித் தொடங்குகிறார்கள். மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனிவ் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை ஆயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்குகொள்ள வைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான, இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன.

- அர்தூர் தல்ஸ்தியகோவ்

புலம் புதிய வெளியீடு


 அவரவர் வாழ்க்கையில் - கவிஞர் சினேகன்

விலை ரூ.500


பாரதிராஜாவின் பார்வையில்...

என் இனிய தமிழ் மக்களே!

ஒவ்வொரு கிராமமும் ஒரு பல்கலைக்கழகம்; ஒவ்வொரு மனிதரும் ஓர் உலகம் என்பதற்கு சினேகன் எழுதியஅவரவர் வாழ்க்கையில்...’ என்கிற இந்த நூல் மிகச் சிறந்த உதாரணம்.

எல்லா கவிஞர்களும் இப்படி எழுதிவிட முடியாது. பாரதிக்கும் கண்ணதாசனுக்கும் பிறகு, யதார்த்தமான வாழ்க்கையை எந்தவித எதிர்ப்புமின்றி பதிவு செய்திருக்கிறான் சினேகன். என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கும் கவிஞன். உழைப்பும் உற்சாகமும் ஒருமிக்க இணைந்த கலைஞன். இவனது வெள்ளந்தியான புன்னகை, என்னை சலவை செய்திருக்கிறது.

மண்வாசனை மாறாத மனிதப் பண்பும், அரிதாரம் பூசிக்கொள்ளாத அன்பும் சினேகனின் பலம். கற்பக விருட்சத்தின் கிளைகள் உயர வளர்ந்து படர்ந்தாலும் அதன் வேர்கள் மட்டும் இன்னும் பத்திரமாக இருப்பது மண்ணுக்குள்தான் என்பதை இந்தப் படைப்பு நிரூபிக்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குள் புகுந்து, தாயின் மடியில் சரிந்து இளைப்பாற எந்த மனிதன்தான் விரும்பமாட்டான். சினேகன், இந்த நூல் மூலமாக அனைவரையும் அவரவர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.

சினேகன் ஒரு திறந்த புத்தகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவன் எழுதிய சிறந்த புத்தகம் இதுதான் என்பது நான் அறிந்ததே. காரணம், இதை வாசிக்கும்போது கண்களில் நீரும், நெஞ்சில் நெகிழ்வும், சிந்தனையில் நம்பிக்கையும் பொங்கி ஆங்காங்கே என்னைத் திக்குமுக்காட வைத்தன.

வீரியமிக்க விதைகள், சிலசமயம் பாறைகளைக்கூட பிளக்கின்றன. இங்கே முளைப்பதற்கு நல்ல நிலம் தேவையில்லை. ‘நம்பிக்கைஎன்னும் பலம் தேவைப்படுகிறது என்ற மாற்றுச் சிந்தனையை இந்த நூல் எனக்குள் ஏற்படுத்துகிறது. இந்த நூல், வாசிக்கும் ஒவ்வொருவரையும் சற்றே அசைத்துப் பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பாசமுள்ள படைப்பாளனும், பயனுள்ள படைப்பும் வளரட்டும்.

வாழ்த்துகள்.