“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts

Sunday, January 22, 2012

டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”


டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால்
வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது.
வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற
வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த
ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை
பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

விலை: ரூ.18 பக்கங்கள்: 48

திபெத்திய மரண நூல் - பத்மசம்பவர்


திபெத்திய மரண நூல்
பத்மசம்பவர்
தமிழாக்கம்: ஓ.ரா.ந. கிருஷ்ணன்

திபெத்திய மரண நூல் (Tibetan Book Of The Dead) என்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள இந்த நூல் மரணத்திலும், மரணத்திற்குப் பின்பும் மறுபிறவி கொள்வதற்கு முன்பும் உள்ள இடைநிலையிலும், மறுபிறவி கொள்ளும் நிலையிலும் நிகழ்பவற்றை தியானத்தில் பெற்ற ஞானக் காட்சிகளின் மூலம் தெளிவாகக் கண்டுணர்ந்து விரிவாக விளக்கிக்கூறும் ஒப்பற்ற பௌத்த சமய நூலாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து திபெத்திற்குப் பௌத்த சமயப் போதகராகச் சென்று அங்கு பௌத்த தம்மத்தை வேரூன்றி வளரச் செய்த பத்மசம்பவர் எனும் ஞானயோகியால் இயற்றப்பட்டதாகும் இந்த அரிய நூல்.
நல்ல வாழ்க்கை இல்லையெனில் நல்ல மரணம் இல்லை. நல்ல மரணம் விமோச்சனத்திற்கு அல்லது நல்ல மறுமைக்குக் காரணமாகின்றது. எவ்வாறு நல்ல வாழ்க்கை வாழ்வது, நல்ல மரணம் எய்துவது, நல்ல மறுமை பெறுவது என்று விளக்கிக் கூறும் இந்த நூல் உலக இலக்கியங்களில் தலைசிறந்த ஒரு நூலாகப் போற்றிப் பாராட்டப்படுகின்றது. இந்த அரிய நூல் இப்போது முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ்த்தாயின் பொன்னடிகளில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

வெளியீடு: மெத்தா
விலை ரூ. 280

சேகுவேராவின் கடிதங்கள்


சேகுவேராவின் கடிதங்கள்

தமிழாக்கம்: உமர்


எனக்கும்
உங்களுக்கும்
இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று
நான் நினைக்கவில்லை.
உலகில் நடக்கிற
அநீதியைக் கண்டு
நீங்கள் கோபம்
கொள்வீர்கள் என்றால்
நாம் தோழர்கள் தான்.
அது தான் முக்கியம்.

எனது குழந்தைகளுக்கு,
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல்
வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும்
என்பது தான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும் இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பது தான்.
ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம்.
என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.
உங்கள் தந்தை
சே

விலை ரூ. 40

ஜஸ்டின் (நாவல்) மார்க்விஸ் தே சாட்


ஜஸ்டின் (நாவல்)

மார்க்விஸ் தே சாட்


தமிழாக்கம்: உமர்


எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்கிற ஒரு துயரம் நிறைந்த கதைதான் இது.
நாம் எதிர்கொள்ள வேண்டி வருகிற கஷ்டங்களை நினைத்து நீங்கள் கண்ணீர் வடித்தால்
நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்லவளான பாவம் ஜஸ்டினின் பயங்கரமான துயரக் கதையை
வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்ட நாங்கள் கட்டாயம் ஆனவர்களானோம்.
அவள் எங்களிடம் சகிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். படிக்கும்போது மேடம் லோர்கினைப் போல உங்களுக்கும் அதன் பயன் கிடைக்கும். அவரைப் போலவே உங்களுக்கும் ஒரு விஷயம் புரியும். யதார்த்த மகிழ்வின் இடம் நன்மையே ஆகும். பூமியில் நன்மை தண்டிக்கப் பட்டால் கடவுள் அனுமதித்தால் கூட அவனது லட்சியத்தை நாம் கேள்வி கேட்கக் கூடாது. நன்மைக்கான பிரதிபலன் ஒருவேளை அடுத்த ஜென்மத்திலாக இருக்கலாம். புனித பைபிளில் சொல்வதைக் கேளுங்கள்.

“தர்மத்தை கடைப்பிடிப்பவனை மட்டுமே கர்த்தர் பரிசுத்த ஆத்மாவாக அறிவிக்கிறார்.”
சரிதான். நன்மையின் பிரதிபலன் நன்மை என்று நினையுங்கள்.

விலை ரூ.80

Tuesday, July 6, 2010

டாக்டர் கே. பாலகோபால்

டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48


மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பாரதி பாடல்களுக்குத் தடை

பாரதி பாடல்களுக்குத் தடை
சட்டமன்ற விவாதங்களின் மொழிபெயர்ப்பு
மொழியாக்கம்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.50 பக்கங்கள்: 100


அடக்குமுறைகளுக்கு மாற்றாக எழுந்த பாரதியின் பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீது சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தின் நூலாக்கம். இது பாரதியின் படைப்பாளுமையை, அதில் கனன்ற விடுதலையின் தழலை வாசகனிடம் சேர்க்கிறது.