“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, January 31, 2022

புலம் விற்பனை உரிமை


 ஓநாய் குலச்சின்னம் (நாவல்) - ஜியாங் ரோங்

தமிழில்: சி.மோகன்

விலை ரூ.500

மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு.

ஓநாய் குலச்சின்னமானது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞான குருவாகவும், போர்க் கடவுளாகவும், மேய்ச்சல்நிலக் காவலனாகவும், குலச்சின்னமாகவும் விளங்கிய ஓநாய்கள் ‘புரட்சிகர நடவடிக்கை’கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டு மேய்ச்சல்நில ஆன்மா சிதைவுற்ற கதை.

மேய்ச்சல்நில ஓநாய்களின் வசியத்திற்கு ஆட்பட்டு ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்த ஒரு சீன இளைஞனின் பார்வையில் உருவாகியிருக்கும் படைப்பு.

2004ஆம் ஆண்டு வெளியான இந்தச் சீன நாவல் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் 

நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையானது. 

இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக் கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை.  உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை, அப்படித்தானே? மான்களுக்குத் தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக் குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய மிகப் பரிதாபகரமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓட முடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ, பாறைப் பிளவுகளிலோ முளைத்து வளர்ந்தால் இது இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல.

நாவலிலிருந்து



ஜியாங் ரோங்

1946ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் ஜியாங் ரோங் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957இல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966இல் ‘சென்ட்ரல் அகாதெமி ஆஃப் பைன் ஆர்ட்’இல் ஜியாங் கல்வி மேற்கொண்டார்.

கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைப்பட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில் -  1967இல் - உள்மங்கோலியாவின் ‘கிழக்கு உஜிம்கியுன் பேனர்’இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்காக அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார்.  அங்கிருந்த காலத்தில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றைத் தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஓய்வுநேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு, மேய்ச்சல்நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.

1978இல் பீஜிங் திரும்பி, ‘சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி’யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், தன் வாழ்வைக் கல்வித் துறையாளராக அமைத்துக்கொண்டார். 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

1999இல் இந்நாவலை எழுதத் தொடங்கி 2003இல் எழுதி முடித்தார்.



புலம் புதிய வெளியீடுகள்


 மாயக்கண்ணி (சிறுகதைகள்) - ஆதிரன்

விலை ரூ.150

அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள்  ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். 

ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இயல்பு இவையிரண்டுமற்ற வெளியொன்றில் பயணிக்க எத்தனிக்கையில் நேர்கிற ஊடாட்டம் வாழ்வின் நெடும்பயணத்திற்குமானது. இந்தக் கதைகள் கனவுலகிற்கும் யதார்த்தத்திற்குமான இயல்புக்கும் இயல்பற்றதற்குமான இடைவெளியில் வாய்க்கின்ற வாழ்வியக்கத்தைச் பேசுகின்றன.

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்

திணைவெளி (நிலம்-சூழலியல்-பண்பாடு) - வறீதையா கான்ஸ்தந்தின்

விலை ரூ.400


இயற்கைச் சூழலில் உயிரிகளின் சார்புநிலைகளைப் பாதித்துக் கொண்டிருக்கின்ற மாற்றங்களை முன்னுணர்ந்து, நேர்மையாக ஆய்ந்து, நம் வாசிப்புக்கு வழங்குகிறார் வறீதையா. தன் தனித்துவமான மொழியால் பொருண்மைகளைப் பல கோணங்களில் அணுகி, ‘அந்தச் சூழலுக்கு நமது பதில் என்ன’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது ‘திணைவெளி’.

முன்னேற்றம் என்று மனிதன் உரிமை கோரும் பாதை சூழலைச் சிதைத்துக்கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள், இளைஞர்கள், எதிர்காலத் தலைவர்கள் எல்லோரும் இச்சிக்கலைப் புரிந்து இயங்க வழிகாட்டியாய் உதவும் அரிய நூல் இது.

பேரா.முனைவர் எ.டி.எஸ்.இராஜ்

சூழலியல் அறிஞர்

பூமி சூடாகிறது. பருவநிலை மாறுகிறது. பனிமலைகள் கரைந்து உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. என் உலகை உங்கள் பேராசையால் அழிக்க நினைக்கும் உங்களுக்கு எத்தனை ஆணவம் என உலகத் தலைவர்களை நோக்கி ஒற்றைச் சிறுமி கிரேட்டா துன்பர்க் கொற்றவையென உறுமுகிறாள். வளர்ச்சி மோகினியின் காதுகள் தங்கத்தால் அடைபட்டுக் கிடக்கின்றன. அலிபாபா குகையில் அளவற்ற செல்வக்குவியலின் நடுவே காசிம்களாக ட்ரம்ப்புகள். குகை திறந்து விடுதலை தரும் மந்திரத்தை ‘திணைவெளி’ உச்சரிக்கிறது.

வெ. ஜீவானந்தம்

வறீதையா கான்ஸ்தந்தின்

பாரம்பரிய கடலோடி சமூகத்தைச் சேர்ந்த முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) ஒரு கடற்கரைக் கல்லூரியில் மீன்வளமும் விலங்கியலும் பயிற்றுவித்து இணைப் பேராசிரியர் - துறைத் தலைவராகப் பணி நிறைவு பெற்றவர் (1982--2018). இந்தியக் கடற்கரை நெடுகப் பயணித்துள்ள இவர், நெய்தல் சூழலியல், வாழ்வாதாரம் குறித்து ஆய்வுசெய்து பதிந்து வருகிறார்.

‘கடலம்மா பேசுறங் கண்ணு!’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘கடற்கோள் காலம்', ‘பெருந்துறை வலசை’உள்ளிட்ட ஏராளமானநூல்களைப் படைத்துள்ளார். 

விருதுகள்: விகடன் (2015),மமா ஆதா (2016), பெரும் பங்களிப்பாளர் (2017), அயாச்சே தேசிய உயர் கல்வியாளர் (புது தில்லி) (2009) விருதுகள், அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016) முதலியவை.

புலம் புதிய வெளியீடுகள்

கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை - வறீதையா கான்ஸ்தந்தின் விலை ரூ.150

அடித்தள மக்களின் அரசியலாக்கமும் பொருளாதார விடுதலையும்...

இன்றைக்கு அதிகார அமைப்பு எப்படி இயங்குகிறது? கொஞ்சம் பேரைப் பெரும்பணக்காரர்களாய் ஆக்குவது; மற்றவர்கள் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது. அந்த பெரும் பணக்காரகளின் அடிமைகளாக்குவது. உலகம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆகியிருக்கிறது. (இதற்கு மாற்றாக) அடித்தள மக்கள் குழுவாக்கத்தின் அடிப்படையில் மதங்களைத் தாண்டிய அரசியல் அமைப்பு முறையை உலக சமூகத்திற்கு முன்மொழிகிறோம்.

பணம் அதிகார முக்கியத்துவம் கொண்டது. மக்களுக்கான சந்தைப் பொருளாதாரம் (கீழிருந்து சந்தைப்படுத்துதல்) பெரும்பாலான சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு தரும். பெருவணிக முதலாளிகளின் கையில் குவிகிற இலாபம் மக்கள் கையில் வரத் தொடங்கினால் கணக்கில்லாத நிதி சேரும். அடித்தளக் குழுக்களின் நுகர்வுத் தேவைகளை உள்சுழற்சிப் பொருளாதார முறையில் மக்களே கையாண்டால் இலாபமாகத் தேறும் பெருநிதியை மக்களின் வளச்சிக்குத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம், மற்றவர்களுக்கும் நிதிக்கொடை வழங்கலாம். நிதியும் வணிகமும் உள்ளே வந்தால் எல்லோரும் உள்ளே வந்துவிடுவார்கள்.

அருட்பணி.எம்.ஜெ.எட்வின்

ஓவியம்: இளஞ்செழியன்


புலம் புதிய வெளியீடுகள்

 


கடல் பழகுதல் - வறீதையா கான்ஸ்தந்தின்

விலை ரூ.500

‘நிலத்துக்கு முதுகையும் கடலுக்கு முகத்தையும் காட்டிக்கொண்டு’ வாழ நேர்ந்துள்ள துறைவன்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையும் அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சமூகத்தின் விவாதப்பொருளாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் தோழர் வறீதையா கான்ஸ்தந்தின். அவர்களது வரலாற்றையும் சமகால வாழ்வையும் முதலாவதாக அவர்களுக்கும் தொடர்ந்து சமவெளியினருக்கும் உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் இப்பணியைச் செய்துவருகிறார். தமிழகத்தின் கடலோரக் கிராமங்களில் வாழும் மீனவர்கள் குறித்து எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றும் இக்கட்டுரைகள் அதற்கும் அப்பால் விரிந்து நாட்டின் கடல்வளம், புரதஉணவு, பாதுகாப்பு, இறையாண்மை, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, கொள்கை வடிவமைப்பில் உள்ள மேட்டிமைத்தனம் போன்றவற்றைப் பற்றி ஒரு கடற்குடியின் கண்ணோட்டத்தில் அறிவுச்சினத்துடன் விளக்கிப் பேசுகின்றன.

ஆதவன் தீட்சண்யா (2019)

(‘கடற்கோள் காலம்’ நூலின் முன்னுரையில்)

வறீதையா கான்ஸ்தந்தின் இதுவரை எழுதியுள்ள 40க்கு மேலான நூல்களில் பலவற்றை நான் படித்தறிந்து வியப்பில் ஆழ்ந்துபோனதுண்டு. அவருக்கென்று வாய்க்கப்பெற்ற மிகக் கம்பீரமானதும் அவ்வளவு எளிதில் வேறு எவரும் கைப்பற்ற முடியாததுமான அந்த அற்புதமான நடையழகில் நான் இலயித்துப் போனதும் உண்டு.

காலமெல்லாம் கடல் சார்ந்தும், கடலோரமக்கள் சார்ந்தும் சிந்தித்துக்கொண்டும் எழுதிக்கொண்டுமான மோனத் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த மேலான மனிதரை நான் என்றும் போற்றுவேன்.

 - பானுமதி பாஸ்கோ

வறீதையா கான்ஸ்தந்தின்

பாரம்பரிய கடலோடி சமூகத்தைச் சேர்ந்த முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) ஒரு கடற்கரைக் கல்லூரியில் மீன்வளமும் விலங்கியலும் பயிற்றுவித்து இணைப் பேராசிரியர் - துறைத் தலைவராகப் பணி நிறைவு பெற்றவர் (1982--2018). இந்தியக் கடற்கரை நெடுகப் பயணித்துள்ள இவர், நெய்தல் சூழலியல், வாழ்வாதாரம் குறித்து ஆய்வுசெய்து பதிந்து வருகிறார்.

‘கடலம்மா பேசுறங் கண்ணு!’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘கடற்கோள் காலம்’, ‘பெருந்துறை வலசை’உள்ளிட்ட ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார். 

விருதுகள்: விகடன் (2015),மமா ஆதா (2016),  பெரும் பங்களிப்பாளர் (2017), அயாச்சே தேசிய உயர் கல்வியாளர் (புது தில்லி) (2009) விருதுகள், அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016) முதலியவை.

புலம் புதிய வெளியீடுகள்


 பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில் நுட்பங்கள் - அனுபவங்கள்)

கோ.பழனி

விலை ரூ.200

பம்மல் சம்பந்தனார் நாடக ஆளுமை, சிறுகதையாளர், பேசும்பட ஆளுமை எனப் பன்முகங்கள் கொண்டவர். அவருக்கிருந்த ஆங்கிலப் புலமை, பல்துறை ஈடுபாடு காரணமாகத் தமிழுலகிற்குப் பல்வேறு படைப்புகள் அவர் வழி கிடைத்துள்ளன. பேசும்படத் துறை சார்ந்ததமிழ்  பேசும்படக் காட்சி’, ‘பேசும்பட அனுபவங்கள்ஆகிய  இரு நூல்களையும் ஒருசேர  இணைத்து, ‘பம்மல் சம்பந்தனார்: பேசும்படத் தொழில் நுட்பங்கள் - அனுபவங்கள்என்பதாக இந்நூல்  பதிப்பிக்கப்படுகின்றது. இதை வாசிப்பவர்களுக்குப் பேசும்படம் சார்ந்த தொழில்நுட்ப அறிவும், பம்மல் சம்பந்தனார் பேசும் படத்துறையில் செயலாற்றியபோது, அவர் எதிர்கொண்ட சிக்கல்கள், அவற்றிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார்? அவர் கற்றவை எவை? போன்றவற்றை அறியும் அனுபவமும் ஒரு சேர வாய்க்கும். அதோடு, தொடக்க காலத் தமிழ்  பேசும்படங்களின் போக்குகளையும் அக்காலத்தில் இத்துறை சார்ந்த தொழில்நுட்ப  அறிவின்  நிலையையும் அறிந்துகொள்ள  இந்நூல் உதவும்.

 

புலம் புதிய வெளியீடுகள்


 அந்தரங்கம் (சிறுகதைகள்) - நோயல் நடேசன்

விலை ரூ.200

புலம் புதிய வெளியீடுகள்


ஆற்றுக்குத் தீட்டில்லை (சிறுகதைகள்) - நித்தில்

விலை ரூ.120

பெண் மனதின் ஒப்பனைகளற்ற குரல் - சி.மோகன்

நித்தில் ஆகிய முத்துலட்சுமி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் நான் பணிபுரிந்தபோது ஓர் ஆய்வு மாணவியாக அறிமுகமானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், என் நெடுநாள் ஓவிய நண்பரான புருஷோத்தமனின் வாழ்க்கைத் துணையாக அவரைச் சந்தித்தேன். இன்று இத்தொகுப்பின் மூலம் நித்தில் எனும் படைப்பாளியாக அவர் வெளிப்பட்டிருக்கிறார். அவருடைய இந்த வெளிப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.

இவருடைய கதை உலகம் பெண்களின் வாழ்நிலைகள் சார்ந்தவை. கதைத் தன்மையில் அமிழ்ந்து போகாது வாழ்வியக்கத்தின் சலனங்களை அவதானிப்பதாகவும் பரிசீலிப்பதாகவும் அவை அமைந்திருக்கின்றன. கண்டதும் கேட்டதுமான கதைகள் மற்றும் சுய சித்திர வரைவுகள் என்றான கதைகள் இவருடையவை. இக்கதைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் தருணங்களுக்கேற்ப வெளிப்படும் அவர்களின் மனக் குரல்களும் பேச்சு மொழிகளும் எவ்வித ஒப்பனைகளும் பூச்சுகளுமின்றி வெகு சகஜமாக அமைந்திருக்கின்றன. வெளிப்பாட்டில் நாகரிகப் பாசாங்கோ தயக்கங்களோ சற்றும் இல்லை.

புலம் புதிய வெளியீடுகள்


 சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் (சிறுகதைகள்) - மீரான் மைதீன்

விலை ரூ.120 

சொற்களில் அழகானவை, அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம்  அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன், எளியவர்களின் மொழியையும்,  அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார். 

புலம் புதிய வெளியீடுகள்


 பாஜக ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி இது தொடருமா?

அ.மார்க்ஸ்

விலை ரூ.150

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.  ஓர் அரசு மக்கள் விரோதமாகவும், திறமையின்றியும் செயல்படும்போது அது மக்களின் ஆதரவை இழக்கும். ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் மத அடிப்படையிலான சிறுபான்மை வெறுப்பு எனும் அணுகல் முறையின் ஊடாகத் தமது பெரும்பான்மை ஆதரவை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும் என அது நம்புகிறது. அதன் விளைவாகத் திட்ட ஆணையம், தகவல் ஆணையம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சிறு தொழில்கள், இன்ஃபார்மல் செக்டார், விவசாயிகள் நலம் என அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது பலவீனப் படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்கள் மூர்க்கமாகத் தாக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகின்றன. விவசாயிகள் மாதக் கணக்கில் போராடினாலும், ‘இன்ஃபார்மல் செக்டார்’ எனப்படும் சிறு தொழில் துறைகள் ஜி.எஸ்.டி வரியால் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும். யாருக்கும் எந்தப் பயனையும் ஈட்டித் தராத பண மதிப்பு நீக்கம் முதலான நடவடிக்கைகளின் ஊடாக, சாதாரண மக்களின் வாழ்வு அழிந்தாலும் பாஜக அரசு கவலைப்படுவதில்லை. அடித்தள மக்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு இன்று பலவீனப்படுத்தப்படுகிறது. 

இன்னொரு பக்கம் புல்வாமா தாக்குதல், எல்லை ஓரத்தில் சீனாவுடன் மோதல் என்கிற பிரச்சினைகளிலும் இது ஒரு தோற்றுப்போன அரசாகத் தன்னை நிறுவியுள்ளது. அயலுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு, கோவிட் பெரும்தொற்றைக் கையாள்வது என அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்த அரசாக, இன்று மோடி அரசு தலைகுனிந்து நிற்கிறது. இத்தனைக்குப் பின்னும் பா.ஜ.க எப்படி இரண்டாம் முறை வெற்றி பெற்றது, இந்த நிலை தொடராமல் இருக்க என்ன வழி என்பது குறித்து கிறிஸ்டோபர் ஜேஃப்ரிலோ, சோயா ஹாசன், ஹர்ஷ் மாண்டர், மானினி சட்டர்ஜி, பத்ரி நாராயண் முதலானோரின் ஆழமான கட்டுரைகளை உள்ளடக்கி அமைகிறது அ.மார்க்ஸ் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ள இந்த முக்கிய நூல்.

புலம் புதிய வெளியீடுகள்


 மாயக்கண்ணி (சிறுகதைகள்) - ஆதிரன்

விலை ரூ.150

அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள்  ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். 


ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இயல்பு இவையிரண்டுமற்ற வெளியொன்றில் பயணிக்க எத்தனிக்கையில் நேர்கிற ஊடாட்டம் வாழ்வின் நெடும்பயணத்திற்குமானது. இந்தக் கதைகள் கனவுலகிற்கும் யதார்த்தத்திற்குமான இயல்புக்கும் இயல்பற்றதற்குமான இடைவெளியில் வாய்க்கின்ற வாழ்வியக்கத்தைச் பேசுகின்றன.

புலம் புதிய வெளியீடுகள்


 விக்கிரமாதித்தன் கதைகள் - தி.குலசேகர்

விலை ரூ.200


விக்ரமாதித்தன் கதைகள் பல சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். விக்ரமாதித்தன்  கதைகள் நிறைய புதிர்களை கொண்டதாகவே இருக்கும். இது சிறுவர்களுக்கான மூலைக்கு வேலை கொடுப்பதோடு விறுவிறுப்பாகவும் இருக்கும். இதில் உள்ள விக்ரமாதித்தன் கதைகள் நிச்சயம் சிந்தைக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை. விக்ரமாதித்தன் கதைகள் என்றாலே அதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லை. அதிலும் வேதாளத்தோடு அவர் இணைகையில் ஆரவாரம் தான். வாருங்கள் விக்ரமாதித்தன் கதைகள் பலவற்றை படிப்போம்.

புலம் புதிய வெளியீடுகள்


 முல்லா கதைகள் - தி.குலசேகர்

விலை ரூ.200

இன்றைய பதின் பருவத்தினரும்  இளைஞர்களும் விரும்பிப் படிக்கிறவிதத்தில் எளிய, நவீன நடையில், முல்லாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் குலசேகர். முல்லாவிற்குள் ஒருமுறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான, வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்.

புலம் புதிய வெளியீடுகள்


 புத்தர் (வரலாறு) - தி.குலசேகர்

விலை ரூ.60

புத்தம் என்றால் ஞானம்.

ஞானம் என்றால் கருணை

மற்றும் நுண்ணுணர்வு.

புலம் புதிய வெளியீடுகள்


 ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழிபெயர்ப்பும்) - 

தி.குலசேகர்

விலை ரூ.130


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில்,  அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள்.  அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமைகளை அகற்றிவிட்டு தரிசிக்கிற சக்தி கொண்டவர்கள். அதனால் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. பேதமற்ற பார்வையோடு, அனைவரையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் தனிமை, தான் என்னும் சொற்கள் பொருளிழக்கின்றன. அவர்களின் அகராதியில் ஒருங்கிணைந்த, ஓர்மை கொண்டிருக்கிற, பிரபஞ்சப் பேரன்பு ஆகிய பதங்களின் அர்த்தங்களே நிரம்பித் ததும்புகின்றன.


புலம் புதிய வெளியீடுகள்


 செவலை சாத்தா (நாவல்) - கிருஷ்ணகோபால்

விலை ரூ.220

‘செவலை சாத்தா’ என்கிற இந்த நாவல் சமகாலப் பசுமை இலக்கிய முன்னெடுப்பின் முக்கியமான புள்ளியாக அமைகிறது. முக்காலங்களையும் மூன்று தலைமுறைகளையும் உள்ளடக்கிச் சொல்லப்படும் இந்தக் கதை பசுமைக்குளம் என்கிற ஊரில் நடக்கிறது. நிகழ்காலமும் வருங்காலமும், யதார்த்தமும் கற்பனையும் சந்திக்கும் புள்ளியாக நிற்கும் செவலை சாத்தா என் மனம் கவர்கிறார். யதார்த்தம் புனைவாகக் காட்டப்படும் இடங்களில் சிலாகித்தாலும், வருங்காலம் குறித்த புனைவு யதார்த்தமாகிவிடக் கூடாதே என்கிற அச்சம் குரல்வளையை நெறிக்கிறது.


‘செவலை சாத்தா’வின் கதைக்களங்கள், புனைவுத்தளங்கள், கதாபாத்திரங்கள், கதையாடல்கள் அனைத்திலும் வருகிற அனைத்திற்கும் பின்னாலிருக்கும் ஆயிரமாயிரம் கதைகளை நான் அறிவேன். இந்தப் புதினத்தின் கதாபாத்திரம் யாக்கியாம்பரம் தன் நிலத்தை விட்டுப் பிரிந்துசெல்ல மறுத்த புகுஃஷிமா விவசாயி ஒருவரை நினைவுபடுத்துவது, ரெனிட்டா எனும் கதாபாத்திரம் ஸ்டெர்லைட் போராளி ஸ்னோலினை பிரதிபலிப்பது போன்றவை எல்லாம் தற்செயலாக நிகழ்ந்தவையல்ல. நம்மை கூடங்குளத்திலிருந்து, புகுஃஷிமாவுக்கும், அங்கிருந்து தூத்துக்குடிக்கும் இழுத்துச் சென்று, பணம், -இயந்திரம்,- சந்தை என்றுழலும் நவீன மனித இழிநிலையை, பூவுலகு தழுவிய பொல்லாங்குகளை, இவற்றுக்கு மாமருந்தாக அமையும் பசுமை அரசியலைக் கோடிட்டுக் காட்டும் கூரிய உத்திகள் என்றே பார்க்கிறேன்.

- சுப. உதயகுமாரன்

புலம் புதிய வெளியீடுகள்


 பாரி ஆட்டம் (நாவல்) - வ.கீரா

விலை ரூ.120


பாரி ஆட்டம் தோன்றிய கணத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது..எனது கதைகளை நான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்தோ, குழுக்களிடமிருந்தோ மிக எதேச்சையான தருணங்களில் கண்களாலும் காதுகளாலும் உள்ளுக்குள் சேகரித்து, இதயத்தின் முடிவுகளில் எழுத்தாகக் கொணர்பவன் என்கிற ஆழமான கர்வமுண்டு.

வெற்றியடையாத இயக்குநர்களைக் குறித்து ஆழத்தெளிவு நிரம்பிய காலமொன்றில், கொரோனா என்கிற மாயக்கரம் உலகை ஆளத் தொடங்கிய ஒரு பொழுதில், மாண்டுபோன பெயர் பெறாத இயக்குநரின் இதய அடங்கலுக்குப் பிறகு, கவனிப்பாற்று கிடக்கும் தருவாயில், பக்கத்தில் யாரும் செல்லத் தயங்கிய துயரமான பொழுதில், புகைப்படக் கலைஞன் படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, அவனோடு அந்தத் தருணத்தில் உடன் நின்றதால் இக்கதை பிறந்தது..

இதில் என் இளம்பருவம் இருக்கிறது; நான் இளம்பருவத்தில் ஊடாடிக் கிடந்த மனிதர்களின் அகவாழ்வு நிரம்பிக் கிடக்கிறது. அறுபது ஆண்டுகால மாந்தர்களை, இக்கால மாந்தனின் இடை நெருடல் வாழ்வை தீர்க்கமாக சொல்லுகின்ற புதிய கதையாடலில் இவ்வாழ்வு தன்னிலிருந்து வெளியேறித் தனது ஆன்மாவைக் கண்டடைந்திருக்கிறது.

இதன் வழியே பழைய மனிதர்களுக்குள் இருக்கும் புதிய வாழ்வை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன் என்கிற முழு திருப்தியைத் தவிர வேறென்ன வேண்டும்..