“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


ஆற்றுக்குத் தீட்டில்லை (சிறுகதைகள்) - நித்தில்

விலை ரூ.120

பெண் மனதின் ஒப்பனைகளற்ற குரல் - சி.மோகன்

நித்தில் ஆகிய முத்துலட்சுமி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் நான் பணிபுரிந்தபோது ஓர் ஆய்வு மாணவியாக அறிமுகமானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், என் நெடுநாள் ஓவிய நண்பரான புருஷோத்தமனின் வாழ்க்கைத் துணையாக அவரைச் சந்தித்தேன். இன்று இத்தொகுப்பின் மூலம் நித்தில் எனும் படைப்பாளியாக அவர் வெளிப்பட்டிருக்கிறார். அவருடைய இந்த வெளிப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.

இவருடைய கதை உலகம் பெண்களின் வாழ்நிலைகள் சார்ந்தவை. கதைத் தன்மையில் அமிழ்ந்து போகாது வாழ்வியக்கத்தின் சலனங்களை அவதானிப்பதாகவும் பரிசீலிப்பதாகவும் அவை அமைந்திருக்கின்றன. கண்டதும் கேட்டதுமான கதைகள் மற்றும் சுய சித்திர வரைவுகள் என்றான கதைகள் இவருடையவை. இக்கதைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் தருணங்களுக்கேற்ப வெளிப்படும் அவர்களின் மனக் குரல்களும் பேச்சு மொழிகளும் எவ்வித ஒப்பனைகளும் பூச்சுகளுமின்றி வெகு சகஜமாக அமைந்திருக்கின்றன. வெளிப்பாட்டில் நாகரிகப் பாசாங்கோ தயக்கங்களோ சற்றும் இல்லை.

No comments:

Post a Comment