“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, July 6, 2010

டாக்டர் கே. பாலகோபால்

டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48


மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.65 பக்கங்கள்: 136


இந்துத்துவம் என்னும் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட மத பயங்கரவாதத்தால் ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவர்களை அணுகிய உண்மையறியும் குழுவின் கட்டுரை வடிவிலான ஆய்வறிக்கையான இது தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் அரசியல்மயமாக வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்
தொகுப்பு: அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி
விலை: ரூ.100 பக்கங்கள்: 184


பின்நவீனத்துவம் குறித்த சிந்தனைகள் வலுப்பெற்ற சூழலில் அடித்தள மக்கள் குறித்த ஆய்வுகளின் தேவை காலத்தின் தேவையாய் முன்னின்றது. அதையொட்டி எழுந்த ஆக்கபூர்வமான விவாதத்தின் வெளிப்பாடாக உருவாகிய கட்டுரைத் தொகுப்பு.

பாரதி பாடல்களுக்குத் தடை

பாரதி பாடல்களுக்குத் தடை
சட்டமன்ற விவாதங்களின் மொழிபெயர்ப்பு
மொழியாக்கம்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.50 பக்கங்கள்: 100


அடக்குமுறைகளுக்கு மாற்றாக எழுந்த பாரதியின் பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீது சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தின் நூலாக்கம். இது பாரதியின் படைப்பாளுமையை, அதில் கனன்ற விடுதலையின் தழலை வாசகனிடம் சேர்க்கிறது.

அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்

அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்
பிரேம்
விலை: ரூ.60 பக்கங்கள்: 120


தமிழில் நவீன அறிவுருவாக்கமும் கோட்பாட்டு உருவாக்கமும் அவசியம் என்பதை அழகியலின் அறவியலின் துணைகொண்டு உணர்த்தும் புதிய அரசியல் பார்வையை முன் வைக்கும் பிரேமின் கட்டுரைகள்

நம் தந்தையரைக் கொல்வதெப்படி

நம் தந்தையரைக் கொல்வதெப்படி
மாலதி மைத்ரி
விலை: ரூ.90 பக்கங்கள்: 176


விளிம்பு நிலை எழுத்துகள் அதிகமாகப் பேசப்படக்கூட இச்சூழலில் சாதி, வர்க்கம், இனம், மொழி, பால் என எல்லாத் தளங்களிலும் அழுத்தப்படும் பெண்களில் குறிப்பாக தலித்த பெண்களின் விடுதலைக்கான குரலை உரக்க எழுப்பும் மாலதி மைத்ரியின் கட்டுரைத்தொகுப்பு.

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
ஜனகப்ரியா
விலை: ரூ.75 பக்கங்கள்: 144


அணு ஆயுத ஒப்பந்தம், இயற்கை வேளாண்மை, நிலப் பகிர்வு, உள் இட ஒதுக்கீடு எனப் பல தளங்களில் இயங்கும் ஜனகப்ரியாவின் கட்டுரைத் தொகுப்பு.

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
டி.பி. ராஜலட்சுமி
பதிப்பாசிரியர்: ப. பத்மினி
விலை: ரூ.70 பக்கங்கள்: 128


பதினோரு வயதில் தம் கலைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் தொடக்க நகர்வில் சினிமா ராணி எனக் கலையுலகத்தினரால் பாராட்டப் பெற்ற டி.பி. ராஜலட்சுமி எழுதிய முதல் நாவல்.

மண்ட்டோ படைப்புகள்

மண்ட்டோ படைப்புகள்
கதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள், ஹிப்டுல்லா
சாதத் ஹசன் மண்ட்டோ
தொகுப்பு - தமிழாக்கம்
ராமாநுஜம்
விலை: ரூ.375 பக்கங்கள்: 620


பிரிவினைக் கால எழுத்தாளராக மட்டுமே அடையாளங்காணப்பட்ட மண்ட்டோவின் எழுத்து பயணித்திருக்கும் வேறு பரிமாணத் தளங்களையும் வாசகனுக்கு அடையாளம் காட்டும் முயற்சியுடன் கதைகள், சொற்சித்திரங்கள் நினைவோடைகள், ஹிப்டுல்லா என மண்ட்டோவின் படைப்பு முயற்சிகள் அனைத்தையும் அறிமுகப்படுத்தும் தொகுப்பாக.