“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Showing posts with label கட்டுரைத் தொகுப்பு. Show all posts
Showing posts with label கட்டுரைத் தொகுப்பு. Show all posts

Sunday, January 22, 2012

டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”


டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால்
வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது.
வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற
வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த
ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை
பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

விலை: ரூ.18 பக்கங்கள்: 48

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?


காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?
அ.மார்க்ஸ்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு


‘எல்லைதாண்டிய பயங்கரவாதம்’தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர்.
இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர்ப் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.
‘காஷ்மீர்ப் பிரச்சினை’ என்பது உண்மையில் ‘காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை’ என்பதன் சுருக்கமே.
காஷ்மீர்ப் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, இன்றைய நிலையை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச்
செல்கிறார் அ. மார்க்ஸ்.
2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றைச் சொல்லும் நூலாசிரியர், புதிய சூழல்களில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல உங்கள்முன் வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல, தென் ஆசியாவில் நடைபெற்றுவரும் இதர விடுதலைப்
போராட்டங்களுக்கும் பொருத்தமானவையே.

விலை ரூ. 130

அ. மார்க்ஸ் சில மதிப்பீடுகள்


அ. மார்க்ஸ் சில மதிப்பீடுகள்
தொகுப்பு: மீனா

எழுத்தாளர் பேச்சாளர் களச்செயற்பாட்டாளர் என பன்முகப் பரிமாணங்களோடு இயங்கிவருகிற
பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலுக்குச் செய்திருக்கும் பங்களிப்புகள் அளப்பரியது. மரபுவழிப்பட்ட கலாச்சார பொதுப்புத்திகளுக்குப் பேரதிர்ச்சியையும், நவீன சிந்தனைகளுக்கு மனந்திறப்போரிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய அவரது முப்பதாண்டு கால செயற்பாடுகளின் மீது தமிழின் முக்கிய எழுத்தாளர்களும், கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தமது மதிப்பீடுகளை முன்வைத்துள்ளனர்.
நட்புரீதியான அனுமானங்கள், எழுத்துகளின் மீதான வாசிப்புகள், உடனியங்கிய அனுபவங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் வெளிப்பட்டுள்ள இம்மதிப்பீடுகள்
வெற்றுப் புகழுரைகளாகவோ, அவதூறுகளாகவோ அன்றி அ.மா-வை விமர்சனப் பூர்வமாய் அணுகியுள்ளன. அதிகாரங்களையும், அவமதிப்புப் பிரச்சாரங்களையும், தனிமைப்பட நேர்ந்த சூழல்களையும் எதிர்கொண்டு அ. மார்க்ஸ் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்புகளை நமக்கு பறைசாற்றுகின்ற இத்தொகுப்பு, தமிழின் ஆகப்பெரும் சிந்தனையாளர் வரிசையில் அ. மார்க்ஸ் தவிர்க்க இயலாதவர் என்பதற்கும் சான்று பகர்கின்றது.

விலை ரூ.220

ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து


ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து
அ. மார்க்ஸ்

வெளியீடு: இந்திய சமூகச் செயல்பாட்டுப் பேரவை

விழிப்படல், கைரேகைகள் முதலிய அங்க அடையாளப்
பதிவுகளுடன் கூடிய
"ஆதார அடையாள அட்டை” (unique identity card)
ஒன்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு
நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
சமூக நலத் திட்டங்கள் இத்தகைய ஆதார அட்டையின் அடிப்படையிலேயே
செயல்படுத்தப்படும் என
ஆளுநர் உரையில் அறிவுறுத்தியிருக்கிறது ஜெயலலிதா அரசு.
இது மக்களின் அனைத்து அந்தரங்கங்களையும்
அரசு தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வரும்
முயற்சிமட்டுமல்ல, படிப்படியாகச் சமூக நலத்திட்டங்களின்
பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவே வழிவகுக்கும்
என்பதை விளக்குகிறது இக் குறுநூல்

விற்பனை உரிமை: புலம்

விலை ரூ.10

இழப்பதற்கு ஏதுமில்லை


இழப்பதற்கு ஏதுமில்லை
அ. மார்க்ஸ்

“ஒவ்வொருமுறை அ. மார்க்ஸின்
பேனா குனியும்போதும் ஒரு தலித் அல்லது முஸ்லிமின் தலை நிமிர்கிறது”
சுமார் இருபதாண்டு காலமாக அவர்
எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் தொடர்பான தேர்வு செய்யப்பட்ட
பதிமூன்று கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குலகும் பாசிச சக்திகளும் முன்வைப்பதுபோல முஸ்லிம்களைக் கலாச்சாரத்தின் கைதிகளாகப் பார்க்க இயலாது, மாறாகக் கலாச்சாரச் சொல்லாடல்களையே சமகால அரசியலில் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும் என முன்னுரையில்
சொல்வதற்கிணங்க முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடல்கள் இக்கட்டுரைகளில் கட்டுடைக்கப்படுகின்றன.
சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான ஒரு அடக்கமான கையேடாக இன்று இது உங்கள் கைகளில் தவழ்கிறது

விற்பனை உரிமை: புலம்

விலை ரூ. 135

பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு (சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)


பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி
அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு

(சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)

அ. மார்க்ஸ்-கோ.சுகுமாரன்

பாபர் மசூதி x இராமர் ஜென்ம பூமிப் பிரச்சனையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீர்ப்புக்குப் பின் அயோத்தி மக்களின் மன நிலையும், வழக்குத் தொடுத்தவர்கள் நிலைபாடுகளையும் நேரில் கண்டறிய அ. மார்க்சும் கோ. சுகுமாரனும் அயோத்திக்கு நேரில் சென்றனர்.
இந்துக்கள், முஸ்லிம்கள், பொது நிலையினர், அரசியல் கட்சியினர் பத்திரிகையாளர்கள் வழக்காடிகள் எனப் பலரையும் அவர்கள் சந்தித்த அனுபவம் ஒரு நாவலின் விறுவிறுப்புடன் இங்கே....

விலை ரூ.55

தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்


தமிழகப் பழங்குடி வழக்காற்றியல்
கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்


பேரா. நல்லதம்பி

பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகள் பலவற்றையும் கொண்டுள்ள இந்நூல், கல்வராயன் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறுஉற்பத்திச் செயல்பாட்டுக்குரிய சடங்குமுறை, கூத்து முதலான கலைவடிவங்களின் இயல்பையும் அவற்றின் தனித்துவத்தையும் நம்பகத் தன்மையோடு பதிவு செய்துள்ளது.
மொழியியல், மானுடவியல், பண்பாட்டு வழக்காற்றியல் நோக்கில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு நூல்கள் குறைவாகவே வந்துள்ள தமிழ்ச் சூழலில், இந்நூல் கல்வராயன் மலைவாழ் பழங்குடிகள் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக்குவதற்கும், அவர்கள் குறித்த மேலாய்வு செய்வதற்கும் துணை நிற்கும்.

விலை ரூ.140

எதிர்ச் சொல் பாரதி தம்பி


எதிர்ச் சொல்
பாரதி தம்பி
பத்து வருடங்கள் சமூகத்தை தொடர்ந்து கவனித்து வரும்
ஒரு பத்திரிகையாளரின் கவனிக்கத்தகுந்த கட்டுரைகள் இவை. யாவும் வணிகமாகிவிட்ட
நடப்பு உலகமய உலகில், பரபரப்புக்காக அல்லாமல்
மக்களின்பால் கரிசனம் கோரும் இவ்வெழுத்துக்கள்தான் உடனடி தேவையும் கூட. பொதுப்புத்திக்கு எதிரே நின்று தர்க்கம் புரிவதை ஒட்டுமொத்த கட்டுரைகளின் சாரமாகக் கொள்ளலாம்.
ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன ஊடகங்களில் இயங்கிவரும் பாரதி தம்பியின் இந்தக் கட்டுரைகள் வெகுஜன இதழ்களுக்கே உரிய மேம்போக்குத் தன்மையில் இருந்து விலகியிருப்பதும், உண்மையை உள்ளடக்கமாய் கொண்டிருப்பதும் முக்கியமானது!

விலை ரூ.70

Tuesday, July 6, 2010

டாக்டர் கே. பாலகோபால்

டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48


மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்

கிறிஸ்துவர்களின் மீது தாக்குதல்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.65 பக்கங்கள்: 136


இந்துத்துவம் என்னும் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட மத பயங்கரவாதத்தால் ஒரிசாவிலும் கர்நாடகாவிலும் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்தவர்களை அணுகிய உண்மையறியும் குழுவின் கட்டுரை வடிவிலான ஆய்வறிக்கையான இது தங்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள கிறிஸ்தவர்கள் அரசியல்மயமாக வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்

விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்
தொகுப்பு: அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி
விலை: ரூ.100 பக்கங்கள்: 184


பின்நவீனத்துவம் குறித்த சிந்தனைகள் வலுப்பெற்ற சூழலில் அடித்தள மக்கள் குறித்த ஆய்வுகளின் தேவை காலத்தின் தேவையாய் முன்னின்றது. அதையொட்டி எழுந்த ஆக்கபூர்வமான விவாதத்தின் வெளிப்பாடாக உருவாகிய கட்டுரைத் தொகுப்பு.

அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்

அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்
பிரேம்
விலை: ரூ.60 பக்கங்கள்: 120


தமிழில் நவீன அறிவுருவாக்கமும் கோட்பாட்டு உருவாக்கமும் அவசியம் என்பதை அழகியலின் அறவியலின் துணைகொண்டு உணர்த்தும் புதிய அரசியல் பார்வையை முன் வைக்கும் பிரேமின் கட்டுரைகள்

நம் தந்தையரைக் கொல்வதெப்படி

நம் தந்தையரைக் கொல்வதெப்படி
மாலதி மைத்ரி
விலை: ரூ.90 பக்கங்கள்: 176


விளிம்பு நிலை எழுத்துகள் அதிகமாகப் பேசப்படக்கூட இச்சூழலில் சாதி, வர்க்கம், இனம், மொழி, பால் என எல்லாத் தளங்களிலும் அழுத்தப்படும் பெண்களில் குறிப்பாக தலித்த பெண்களின் விடுதலைக்கான குரலை உரக்க எழுப்பும் மாலதி மைத்ரியின் கட்டுரைத்தொகுப்பு.

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
ஜனகப்ரியா
விலை: ரூ.75 பக்கங்கள்: 144


அணு ஆயுத ஒப்பந்தம், இயற்கை வேளாண்மை, நிலப் பகிர்வு, உள் இட ஒதுக்கீடு எனப் பல தளங்களில் இயங்கும் ஜனகப்ரியாவின் கட்டுரைத் தொகுப்பு.

Tuesday, June 22, 2010

தற்கொலைகளைக் கொண்டாடுவோம்

தற்கொலைகளைக் கொண்டாடுவோம்
ராமாநுஜம்
விலை: ரூ.130 பக்கங்கள்: 242



வரலாறு, சமயம், சாதி, உடல், பால் எனப் பல தளங்களில் கட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக்குப் புனிதங்களைக் கட்டுடைக்கும் பிரதிகள்மீது ராமாநுஜம் கொண்டிருக்கும் புரிதல், அவரது மொழி நகர்த்திச் செல்லும் தளம், சமூக இருப்பில் நாம் பேணுவதாக நம்பிக்கொண்டிருக்கும் தூய்மைவாதக் கற்பனைகளைப் புறந்தள்ளி, மையங்களை விலக்கி அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் பார்வையை நம்மிடம் விட்டுச் செல்கின்றது.

Thursday, December 3, 2009

ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்

ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்
அ. மார்க்ஸ்
விலை: ரூ.70 பக்கங்கள்: 144



ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அரசியல் லாபங்களுக்காக மறைக்கப்படும் உண்மைகளை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் போருக்குப் பிந்தைய ஈழம் எதிர்கொண்டிருக்கும் சிக்கலின் தீவிரத்தை ஆய்வுபூர்வமாக முன்வைக்கிறார்.

Wednesday, September 16, 2009

'குடி'யின்றி அமையா உலகு

'குடி'யின்றி அமையா உலகு
தொகுப்பு: முத்தையா வெள்ளையன்
விலை: ரூ.120 பக்கங்கள்: 240


அறம் பற்றிய பார்வையும் சமூக மதிப்பீடுகள் பற்றிய அக்கறையும் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் குடியைப் பற்றிய மீள் மதிப்பீட்டை முன்வைக்கும் நூல்.