“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 செவலை சாத்தா (நாவல்) - கிருஷ்ணகோபால்

விலை ரூ.220

‘செவலை சாத்தா’ என்கிற இந்த நாவல் சமகாலப் பசுமை இலக்கிய முன்னெடுப்பின் முக்கியமான புள்ளியாக அமைகிறது. முக்காலங்களையும் மூன்று தலைமுறைகளையும் உள்ளடக்கிச் சொல்லப்படும் இந்தக் கதை பசுமைக்குளம் என்கிற ஊரில் நடக்கிறது. நிகழ்காலமும் வருங்காலமும், யதார்த்தமும் கற்பனையும் சந்திக்கும் புள்ளியாக நிற்கும் செவலை சாத்தா என் மனம் கவர்கிறார். யதார்த்தம் புனைவாகக் காட்டப்படும் இடங்களில் சிலாகித்தாலும், வருங்காலம் குறித்த புனைவு யதார்த்தமாகிவிடக் கூடாதே என்கிற அச்சம் குரல்வளையை நெறிக்கிறது.


‘செவலை சாத்தா’வின் கதைக்களங்கள், புனைவுத்தளங்கள், கதாபாத்திரங்கள், கதையாடல்கள் அனைத்திலும் வருகிற அனைத்திற்கும் பின்னாலிருக்கும் ஆயிரமாயிரம் கதைகளை நான் அறிவேன். இந்தப் புதினத்தின் கதாபாத்திரம் யாக்கியாம்பரம் தன் நிலத்தை விட்டுப் பிரிந்துசெல்ல மறுத்த புகுஃஷிமா விவசாயி ஒருவரை நினைவுபடுத்துவது, ரெனிட்டா எனும் கதாபாத்திரம் ஸ்டெர்லைட் போராளி ஸ்னோலினை பிரதிபலிப்பது போன்றவை எல்லாம் தற்செயலாக நிகழ்ந்தவையல்ல. நம்மை கூடங்குளத்திலிருந்து, புகுஃஷிமாவுக்கும், அங்கிருந்து தூத்துக்குடிக்கும் இழுத்துச் சென்று, பணம், -இயந்திரம்,- சந்தை என்றுழலும் நவீன மனித இழிநிலையை, பூவுலகு தழுவிய பொல்லாங்குகளை, இவற்றுக்கு மாமருந்தாக அமையும் பசுமை அரசியலைக் கோடிட்டுக் காட்டும் கூரிய உத்திகள் என்றே பார்க்கிறேன்.

- சுப. உதயகுமாரன்

No comments:

Post a Comment