“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 பாரி ஆட்டம் (நாவல்) - வ.கீரா

விலை ரூ.120


பாரி ஆட்டம் தோன்றிய கணத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது..எனது கதைகளை நான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்தோ, குழுக்களிடமிருந்தோ மிக எதேச்சையான தருணங்களில் கண்களாலும் காதுகளாலும் உள்ளுக்குள் சேகரித்து, இதயத்தின் முடிவுகளில் எழுத்தாகக் கொணர்பவன் என்கிற ஆழமான கர்வமுண்டு.

வெற்றியடையாத இயக்குநர்களைக் குறித்து ஆழத்தெளிவு நிரம்பிய காலமொன்றில், கொரோனா என்கிற மாயக்கரம் உலகை ஆளத் தொடங்கிய ஒரு பொழுதில், மாண்டுபோன பெயர் பெறாத இயக்குநரின் இதய அடங்கலுக்குப் பிறகு, கவனிப்பாற்று கிடக்கும் தருவாயில், பக்கத்தில் யாரும் செல்லத் தயங்கிய துயரமான பொழுதில், புகைப்படக் கலைஞன் படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, அவனோடு அந்தத் தருணத்தில் உடன் நின்றதால் இக்கதை பிறந்தது..

இதில் என் இளம்பருவம் இருக்கிறது; நான் இளம்பருவத்தில் ஊடாடிக் கிடந்த மனிதர்களின் அகவாழ்வு நிரம்பிக் கிடக்கிறது. அறுபது ஆண்டுகால மாந்தர்களை, இக்கால மாந்தனின் இடை நெருடல் வாழ்வை தீர்க்கமாக சொல்லுகின்ற புதிய கதையாடலில் இவ்வாழ்வு தன்னிலிருந்து வெளியேறித் தனது ஆன்மாவைக் கண்டடைந்திருக்கிறது.

இதன் வழியே பழைய மனிதர்களுக்குள் இருக்கும் புதிய வாழ்வை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன் என்கிற முழு திருப்தியைத் தவிர வேறென்ன வேண்டும்..


No comments:

Post a Comment