“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்

திணைவெளி (நிலம்-சூழலியல்-பண்பாடு) - வறீதையா கான்ஸ்தந்தின்

விலை ரூ.400


இயற்கைச் சூழலில் உயிரிகளின் சார்புநிலைகளைப் பாதித்துக் கொண்டிருக்கின்ற மாற்றங்களை முன்னுணர்ந்து, நேர்மையாக ஆய்ந்து, நம் வாசிப்புக்கு வழங்குகிறார் வறீதையா. தன் தனித்துவமான மொழியால் பொருண்மைகளைப் பல கோணங்களில் அணுகி, ‘அந்தச் சூழலுக்கு நமது பதில் என்ன’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது ‘திணைவெளி’.

முன்னேற்றம் என்று மனிதன் உரிமை கோரும் பாதை சூழலைச் சிதைத்துக்கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள், இளைஞர்கள், எதிர்காலத் தலைவர்கள் எல்லோரும் இச்சிக்கலைப் புரிந்து இயங்க வழிகாட்டியாய் உதவும் அரிய நூல் இது.

பேரா.முனைவர் எ.டி.எஸ்.இராஜ்

சூழலியல் அறிஞர்

பூமி சூடாகிறது. பருவநிலை மாறுகிறது. பனிமலைகள் கரைந்து உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. என் உலகை உங்கள் பேராசையால் அழிக்க நினைக்கும் உங்களுக்கு எத்தனை ஆணவம் என உலகத் தலைவர்களை நோக்கி ஒற்றைச் சிறுமி கிரேட்டா துன்பர்க் கொற்றவையென உறுமுகிறாள். வளர்ச்சி மோகினியின் காதுகள் தங்கத்தால் அடைபட்டுக் கிடக்கின்றன. அலிபாபா குகையில் அளவற்ற செல்வக்குவியலின் நடுவே காசிம்களாக ட்ரம்ப்புகள். குகை திறந்து விடுதலை தரும் மந்திரத்தை ‘திணைவெளி’ உச்சரிக்கிறது.

வெ. ஜீவானந்தம்

வறீதையா கான்ஸ்தந்தின்

பாரம்பரிய கடலோடி சமூகத்தைச் சேர்ந்த முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) ஒரு கடற்கரைக் கல்லூரியில் மீன்வளமும் விலங்கியலும் பயிற்றுவித்து இணைப் பேராசிரியர் - துறைத் தலைவராகப் பணி நிறைவு பெற்றவர் (1982--2018). இந்தியக் கடற்கரை நெடுகப் பயணித்துள்ள இவர், நெய்தல் சூழலியல், வாழ்வாதாரம் குறித்து ஆய்வுசெய்து பதிந்து வருகிறார்.

‘கடலம்மா பேசுறங் கண்ணு!’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘கடற்கோள் காலம்', ‘பெருந்துறை வலசை’உள்ளிட்ட ஏராளமானநூல்களைப் படைத்துள்ளார். 

விருதுகள்: விகடன் (2015),மமா ஆதா (2016), பெரும் பங்களிப்பாளர் (2017), அயாச்சே தேசிய உயர் கல்வியாளர் (புது தில்லி) (2009) விருதுகள், அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016) முதலியவை.

No comments:

Post a Comment