“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்

 


கடல் பழகுதல் - வறீதையா கான்ஸ்தந்தின்

விலை ரூ.500

‘நிலத்துக்கு முதுகையும் கடலுக்கு முகத்தையும் காட்டிக்கொண்டு’ வாழ நேர்ந்துள்ள துறைவன்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையும் அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சமூகத்தின் விவாதப்பொருளாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் தோழர் வறீதையா கான்ஸ்தந்தின். அவர்களது வரலாற்றையும் சமகால வாழ்வையும் முதலாவதாக அவர்களுக்கும் தொடர்ந்து சமவெளியினருக்கும் உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் இப்பணியைச் செய்துவருகிறார். தமிழகத்தின் கடலோரக் கிராமங்களில் வாழும் மீனவர்கள் குறித்து எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றும் இக்கட்டுரைகள் அதற்கும் அப்பால் விரிந்து நாட்டின் கடல்வளம், புரதஉணவு, பாதுகாப்பு, இறையாண்மை, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, கொள்கை வடிவமைப்பில் உள்ள மேட்டிமைத்தனம் போன்றவற்றைப் பற்றி ஒரு கடற்குடியின் கண்ணோட்டத்தில் அறிவுச்சினத்துடன் விளக்கிப் பேசுகின்றன.

ஆதவன் தீட்சண்யா (2019)

(‘கடற்கோள் காலம்’ நூலின் முன்னுரையில்)

வறீதையா கான்ஸ்தந்தின் இதுவரை எழுதியுள்ள 40க்கு மேலான நூல்களில் பலவற்றை நான் படித்தறிந்து வியப்பில் ஆழ்ந்துபோனதுண்டு. அவருக்கென்று வாய்க்கப்பெற்ற மிகக் கம்பீரமானதும் அவ்வளவு எளிதில் வேறு எவரும் கைப்பற்ற முடியாததுமான அந்த அற்புதமான நடையழகில் நான் இலயித்துப் போனதும் உண்டு.

காலமெல்லாம் கடல் சார்ந்தும், கடலோரமக்கள் சார்ந்தும் சிந்தித்துக்கொண்டும் எழுதிக்கொண்டுமான மோனத் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த மேலான மனிதரை நான் என்றும் போற்றுவேன்.

 - பானுமதி பாஸ்கோ

வறீதையா கான்ஸ்தந்தின்

பாரம்பரிய கடலோடி சமூகத்தைச் சேர்ந்த முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை, கன்னியாகுமரி மாவட்டம்) ஒரு கடற்கரைக் கல்லூரியில் மீன்வளமும் விலங்கியலும் பயிற்றுவித்து இணைப் பேராசிரியர் - துறைத் தலைவராகப் பணி நிறைவு பெற்றவர் (1982--2018). இந்தியக் கடற்கரை நெடுகப் பயணித்துள்ள இவர், நெய்தல் சூழலியல், வாழ்வாதாரம் குறித்து ஆய்வுசெய்து பதிந்து வருகிறார்.

‘கடலம்மா பேசுறங் கண்ணு!’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘கடற்கோள் காலம்’, ‘பெருந்துறை வலசை’உள்ளிட்ட ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார். 

விருதுகள்: விகடன் (2015),மமா ஆதா (2016),  பெரும் பங்களிப்பாளர் (2017), அயாச்சே தேசிய உயர் கல்வியாளர் (புது தில்லி) (2009) விருதுகள், அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016) முதலியவை.

No comments:

Post a Comment