“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 பாஜக ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி இது தொடருமா?

அ.மார்க்ஸ்

விலை ரூ.150

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.  ஓர் அரசு மக்கள் விரோதமாகவும், திறமையின்றியும் செயல்படும்போது அது மக்களின் ஆதரவை இழக்கும். ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் மத அடிப்படையிலான சிறுபான்மை வெறுப்பு எனும் அணுகல் முறையின் ஊடாகத் தமது பெரும்பான்மை ஆதரவை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும் என அது நம்புகிறது. அதன் விளைவாகத் திட்ட ஆணையம், தகவல் ஆணையம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சிறு தொழில்கள், இன்ஃபார்மல் செக்டார், விவசாயிகள் நலம் என அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது பலவீனப் படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்கள் மூர்க்கமாகத் தாக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகின்றன. விவசாயிகள் மாதக் கணக்கில் போராடினாலும், ‘இன்ஃபார்மல் செக்டார்’ எனப்படும் சிறு தொழில் துறைகள் ஜி.எஸ்.டி வரியால் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும். யாருக்கும் எந்தப் பயனையும் ஈட்டித் தராத பண மதிப்பு நீக்கம் முதலான நடவடிக்கைகளின் ஊடாக, சாதாரண மக்களின் வாழ்வு அழிந்தாலும் பாஜக அரசு கவலைப்படுவதில்லை. அடித்தள மக்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு இன்று பலவீனப்படுத்தப்படுகிறது. 

இன்னொரு பக்கம் புல்வாமா தாக்குதல், எல்லை ஓரத்தில் சீனாவுடன் மோதல் என்கிற பிரச்சினைகளிலும் இது ஒரு தோற்றுப்போன அரசாகத் தன்னை நிறுவியுள்ளது. அயலுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு, கோவிட் பெரும்தொற்றைக் கையாள்வது என அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்த அரசாக, இன்று மோடி அரசு தலைகுனிந்து நிற்கிறது. இத்தனைக்குப் பின்னும் பா.ஜ.க எப்படி இரண்டாம் முறை வெற்றி பெற்றது, இந்த நிலை தொடராமல் இருக்க என்ன வழி என்பது குறித்து கிறிஸ்டோபர் ஜேஃப்ரிலோ, சோயா ஹாசன், ஹர்ஷ் மாண்டர், மானினி சட்டர்ஜி, பத்ரி நாராயண் முதலானோரின் ஆழமான கட்டுரைகளை உள்ளடக்கி அமைகிறது அ.மார்க்ஸ் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ள இந்த முக்கிய நூல்.

No comments:

Post a Comment