“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, April 6, 2020

புலம் புதிய வெளியீடு


ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் - விஜய் மகேந்திரன்
விலை ரூ.150


"ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்" படித்தேன்.வாசகனின் தோள் மீது கை போட்டு நடக்கும் மொழிநடை, நிறைய தகவல்கள் இசை பற்றி, ரஹ்மான் வாழ்வைச் சொல்வது போல அவர் காலத்து சினிமா உலகையே பேசி விடும் லாவகம் கைகூடி இருக்கிறது . இந்த நூலுக்கு  best seller ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது . சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் இதை ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகக் கூட நினைத்து படிக்கலாம்.
- கவிஞர் இந்திரன்

நான் கல்லூரி காலத்தில் இருந்து இளையராஜா அளவுக்கே ரஹ்மானின் வெறியனாகவும் மாறினேன்.இசைப்புயலின் இசை வசீகரத்தை தன் வார்த்தைகளால் எழுதி வசீகரித்திருக்கிறார் விஜய் மகேந்திரன் இந்த புத்தகம் நெடுக...இசைப்புயல் பற்றி நிறைய தகவல்கள்...இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு  இசைப்புயல் குறித்து இன்னொரு புரிதல் கிடைக்கும்.
- எழுத்தாளர் என்.ஸ்ரீராம்

புலம் புதிய வெளியீடு

திரை ஆளுமைகளும் நானும் (கட்டுரைகள்) - தி. குலசேகர்
விலை ரூ.260

முகநூலில் என்னுடைய திரைப்பட அனுபவங்களைப் பதிவுசெய்யும் விதத்தில், நான் பணியாற்றிய திரைப்படக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை அவ்வப்போது எழுதிப் பதிவிடுவதுண்டு. அதை உடனுக்குடன் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டும் விதத்தில் நண்பர் விஜய் மகேந்திரன் நேரம் மறந்து உரையாடியிருக்கிறார். அப்படியான கட்டுரைகளுக்கு முகநூலில் இத்தனை வரவேற்புக் கிடைத்தது எதிர்பார்க்காதது. அவை, பல தோழமைகளை, திரை ஆளுமைகளை நட்பு வட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. இப்போது ‘திரை ஆளுமைகளும் நானும்’ என்ற தலைப்பில் உங்கள் கையில் தவழ்கிறது.