“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, May 15, 2020

புலம் புதிய வெளியீடு


புலம் புதிய வெளியீடு

சீன எழுத்தாளரும் ஓவியக் கலைஞருமான
கௌஜின் ஜியாங்கின் I தேர்ந்தெடுத்த சிறுகதைகள் I
தமிழில்: சீ. முத்துசாமி
விலை ரூ.120

கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.
1987 டிசம்பரில், இலக்கிய சுதந்திரம் தேடி, சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார்.
இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை - அவரது பார்வையில், இந்த ஆறுகதைகளும் - அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை, இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
2000ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு, இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

Tuesday, April 7, 2020

புலம் புதிய வெளியீடு

மக்கள் தெய்வங்கள் (நாட்டார் தெய்வங்களின் கதைகள்) - கோ.பழனி
விலை ரூ.160


நம்பிக்கைகளையும்  சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில்,  வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டதன் கதைகள். இக்கதைகள் எளிய மக்களின் நிலவெளியில் நிகழ்ந்தவை. காலங்களைக் கடந்தும் அந்நியப்படாமல் அவர்களின் வாழ்வோடு பிணைந்து கிடப்பவை.. எழுத்தில் வருவதன் மூலம் இக்கதைகள் பெரும் மக்கள் பரப்பை அடையும் சாத்தியம் கொண்டவை.