“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 பெண் மைய வாசிப்பும் அரசியலும் (கட்டுரைகள்) - முனைவர் அரங்கமல்லிகா

விலை ரூ.150


எல்லையற்ற பேராற்றலாய், தொல் சமூகத்தில் யாவும் ஆனவளாய் இருந்த பெண், உடைமைச் சமூகத்தின் வேரூன்றலில் விளிம்புநிலைக்கு நகர்த்தப்பட்டிருக்கும் வரலாற்றுப் பெருவெளியை இலக்கியமும் தன்னுள் கொண்டிருக்கிறது. காலம் யாவினும் மாறாததாய் இருக்கும் ஆண் பெண் பேதமும் முரணும் எல்லாக் காலத்திலும் பேசித் தீர்த்திட இயலாதவை. நவீன காலத்திற்குமான புதிய வடிவங்களைத் தாங்கிநிற்கும் இந்த வேறுபாடு பெண்ணியக் கோட்பாடுகளையும் நோக்குகளையும் நாம் புதுப்பித்துக்கொள்ளும் தேவையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெண் மொழி, உடல், தன்னிலை, அரசியல் எனும் நிலைகளில் பெண் படைப்புகளை நோக்குகின்றன. காத்திரமான மொழியில் தனித்துவமான பார்வையைக் கொண்ட இக்கட்டுரைகள், நவீன இலக்கியத்தைப் பெண் நோக்கோடு காண்பதற்கான ஆதார நூலாகவும் வளரும் ஆய்வாளருக்கு ஆய்வுப் பார்வையை வழங்குவதாகவும் இருக்கின்றது.

No comments:

Post a Comment