“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும் (மோனோகிராஃப்) - சி.மோகன்

விலை ரூ.120


ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வின் ருசிகளை ரசித்து அனுபவிப்பவராக, சாதி, வர்க்க அடையாளங்களை முற்றிலும் துடைத்தெறிந்தவராக, வாழ்வின் சரிவுப் பாதையில் தயக்கமேதுமின்றிக் கால் வைப்பவராக, அப்பாதையில் சல்லென்று வழுக்கிச் செல்பவராக, வீடற்றவராக, வீதிகளில் படுத்துறங்குபவராக, தன் போதைகளின் தேவைக்காக இரஞ்சுபவராக, ஒரு நாடோடியாக, வாழ்வின் இறுதியில் மிக மோசமான நோயாளியாக  வாழ்ந்து அரசு பொது மருத்துவமனையில் அனாதையாக மடிந்தவர் ஜி. நாகராஜன்.

No comments:

Post a Comment